வணக்கம்.
என்னை உங்களுக்கு தெரியாது. ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும்.
கடந்த சில நாட்களாகவே தாங்கள் தூக்கம், பசி, சந்தோசம் இல்லாமல் அலைவதாக அறிந்தேன். இவை அனைத்தும் உங்களுக்கு பிள்ளைகள் பிறந்தவுடனயே காணாமல் போய்விட்டது என்பது திராவிடர்கள் அனைவருக்கும் நன்றாக தெரிந்த ஒரு விஷயம். நான் அதைப் பற்றி சொல்லவில்லை. தங்கள் அரசியல் வாழ்க்கையை பற்றி சொன்னேன்.
"மடியில் கனமிருந்தால் வழியில் பயமிருக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல், இப்போது நீங்கள் அலைந்து கொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் யோசிப்பது போல் ஐந்து வருடங்களுக்கு முன்னர் யோசித்திருந்தால் (மக்களுக்கு என்ன நன்மைகள் செய்யலாம் என்று...) இந்த அலைச்சல் மற்ற கட்சிகளுக்கு இருந்திருக்கும்.
நீங்கள் ஆட்சி செய்த இந்த ஐந்து வருடங்கள், உங்கள் வீட்டு பஞ்சாயத்தை பார்பதற்கே சரியாக இருந்தது. எந்த பிள்ளைக்கு என்ன செய்யலாம் என்று மட்டுமே யோசித்தீர்கள். இதனை நீங்களோ அல்லது உங்கள் மக்களோ யாரும் மறுத்து பேச முடியாது. மக்கள் அனைவரும் கண்கூடாக கண்ட ஒரு உண்மை இது.
அண்ணா தொடங்கிய திராவிட கட்சியானது இப்போது குடும்ப கட்சியாகிப் போனது. கட்சியில் அடிமட்டத்தில் இறங்கி வேலை பார்த்த உண்மையான தொண்டர்கள் அனைவருக்கு கடைசியில் கிடைத்தது என்ன? இலவச தொலைக்காட்சி, இலவச அடுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை. ஆனால், செல்வச்செழிப்பில் வளர்ந்த தங்கள் குடும்பத்திற்கு கிடைத்ததோ கட்சியின் அனைத்து பதவிகளும். இதில் விதிவிலக்கான ஸ்டாலின் மட்டுமே உழைத்து, முன்னேறி உயர் பதவிகளுக்கு வந்தார். இதில் யாருக்கும் மாற்று கருது இல்லை என்றே சொல்லலாம்.
தங்கள் குடும்பத்தினர் அனைவரும் கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறார்கள். இன்னும் அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்கள்? இருக்கின்ற இந்த செல்வங்கள் போதாதா?
இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து, வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்திலிருந்து வரி கட்டி, மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடி பெறவேண்டிய சூழ்நிலைக்கு உங்களால் தள்ளப்பட்ட என்னை போன்ற பல்லாயிரக்கணக்கான குடிமகன்களுக்கு நீங்கள் செய்தது என்ன?
என்னது இலவசங்களை வாரி வழங்கினீர்களா?
யாருக்கு ஐயா வேண்டும் இலவசம்?
ஆங்கிலத்தில் ஒரு பழமொழியின் தமிழாக்கம்....
"பசிக்கின்ற ஒருவனுக்கு மீன் கொடு,
அவனின் ஒரு வேளைக்கு பசி தீரும்.
அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக்கொடு,
அவனுக்கு வாழ்நாள் முழுவதற்கும் பசி தீரும்"
இலவசங்கள், மக்களை சோம்பேறிகளாக ஆக்கியதை தவிர வேறு என்ன செய்தன. நீங்கள் மிகவும் நம்பிய இந்த இலவசங்கள் இப்போது உங்களுக்கே மிகுந்த தலைவலியாக வந்திருப்பதை கவனித்தீர்களா? அதற்கு பதிலாக வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தியிருந்தால் அனைவருக்கும் நன்மையாய் இருந்திருக்குமே. நாங்களே இவை அனைத்தையும் வாங்கியிருப்போமே.
மேலும் சொந்தமாக எதையும் செய்யாமல், மத்திய அரசின் திட்டங்களை தமிழ்ப்படுத்தி தமிழ்நாட்டில் உலவ விட்டீர்கள் (108, JNURM.. etc). அதுவே வினையாகி விட்டது.
வட மாவட்டங்கள் அனைத்தையும் ஸ்டாலின் வசம், தென் மாவட்டங்கள் அனைத்தும் அழகிரி வசம் என்று பிரித்து கொடுத்து இருக்கிறீர்களே, தமிழ் நாடு என்ன உங்கள் குடும்ப சொத்தா? நீங்கள் சொன்னதுபோல், அரசியலுக்கு நீங்கள் வரும்போது கொண்டு வந்த மஞ்சள் பையை மட்டுமே பிரித்து கொடுக்க உங்களுக்கு உரிமை இருக்கிறது. நினைவில் இருக்கட்டும்.
400 கோடிக்கு மேல் செலவு செய்து தாங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்காகவும், உங்களை புகழும் அடிவருடிகளுக்காகவும் நடத்திய தமிழ் செம்மொழி மாநாட்டால் யாருக்கு என்ன பயன். இது வரையில் புதிய தமிழ்ச்சொற்கள் உருவாக ஏதாவது செய்தீர்களா? முத்தமிழ் அறிஞர் என்று உங்களுக்கு பட்டம் சரிதானா?
தொட்டதெற்கெல்லாம் பாராட்டு விழா நடத்தி என்ன பயன்? உங்கள் பணத்திலா நலத்திட்டங்கள் செய்தீர்கள்? அவ்வளவும் எங்கள் பணம் ஐயா. எங்களிடம் பணம் வாங்கி (வரியாக) எங்களுக்கு செய்வதற்கு உங்களுக்கு ஏன் பாராட்டு விழா? கூத்தாடிகளின் பாராட்டு நிலையானது அல்ல. அன்று அம்மையாரை புகழ்ந்ததும் இதே வாய்கள்தான். மக்களைத் தவிர மற்ற அனைவரிடமும் பாராட்டு பெற்று விட்டீர்கள்.
கட்சி பேதம் பார்க்காமல் உங்கள் கட்சியினரும், குடும்பத்தினரும் இயற்கை வளங்களை சூறையாடி (மணல் கொள்ளை, விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக்கியது என்பது போன்ற பல..) பணம் பண்ணினரே? இதற்கு உங்கள் பதில்? அடுத்த தலைமுறையினருக்கு நாங்கள் என்ன பதில் சொல்வோம்? தமிழ்நாட்டில் மொத்தம் ஆறு கோடி மக்கள் வசிக்கிறார்கள் ஐயா, உங்கள் குடும்பம் மட்டும் அல்ல.
உங்கள் ஆட்சி செய்ய மறந்தது பல உள்ளது. ஒரு சில உங்கள் பார்வைக்கு...

- பூரண மதிவிலக்கு மற்றும் புகையிலை பொருட்களை தடை செய்வது
- ஏரி, கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் தூர்வாறுதல்
- மரபு சாரா மின்சார உற்பத்தி (சூரிய சக்தி, குப்பைகளில் இருந்து மின்சாரம்)
- மரபு சாரா எரிசக்தி (உணவுக்கழிவுகளில் இருந்து சமையல் எரிவாயு)
- நோய்வாய்ப் பட்டிருக்கும் போக்குவரத்துத் துறையின் புனரமைப்பு
- அனைத்து அரசுப் பள்ளிகளின் சீரமைப்பு
- காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல்
- பிரேசில் நாட்டில் உள்ளது போல் "food for trash program" மூலம் குப்பைகளை மறு சுழற்சி செய்யலாம்
- விவசாய தொழிலின் புனரமைப்பு
- சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு
- அரசு மருத்துவமனைகளை சீரமைத்தல்
- வாகன கட்டணங்களை முறைப்படுத்துதல்
- அனைத்து கிராமங்களுக்கும் பேருந்து, மின்சார மற்றும் மருத்துவமனை வசதிகள்
என்ன செய்வது. காலம் கடந்த விட்டது. வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...
மக்களுக்கு:
கலைஞர் செய்ய மறந்த கதையை நீங்கள் மறக்காமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் தேர்தல் வரும் வரையிலாவது....

4 comments:
அட ஏனுங்க நீங்க வேறே?
அவர் கண்டிப்பா இதை எல்லாம் செய்யமாட்டார்...
நம்ம தலையெழுத்து அவ்வளவுதான் என்னைக்கு காச வாங்கிட்டு ஓட்டு போட்டமோ அன்னைக்கே அவுட்.... வேற எதாவது நடக்ககிறத பேசுங்கப்பு
இதை பார்த்து யாராவது திருந்த மாட்டார்களா என்கிற நப்பாசை தான் காரணம். தினமும் வெளியில் போகும்போது இந்த நாடு ஏன் இப்படி கிடக்கிறது என்கின்ற வெறி.
எதை எழுதி என்ன?சொரணை வந்து விடப்போகிறதா?ஆளும் வர்க்கம் ஆளும் வர்க்கமே!மக்கள் பலிக்கடாக்கள்!!
நீங்கள் சொல்வது சரிதான் திரு. யோகா அவர்களே. இவர்களுக்கு சொரணை வராது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயம். மக்களுக்கு வராதா என்பதே என் ஆதங்கம்.
Post a Comment