மேல்மருவத்தூர் அடிகளாரின் மகன் திரு. அன்பழகன் அரசியலில் நுழையப் போவதாக வந்த செய்திதான் அது.
இவர் எதற்காக அரசியலுக்கு வருகிறார்? மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை தாங்கள் வசிக்கும் பகுதியின் முன்னேற்றம் கருதியா?
இப்படி ஏதாவது தவறாக எதிர்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.
சென்ற மாதங்களில் அடிகளாரின் அரசாங்கத்துக்கு ஆப்பு வைத்தனர் அரசு அதிகாரிகள். இவை, அடிகளாரின் குடும்பத்தை மிகவும் யோசிக்க வைத்தது என்றும், தங்களுக்கு அரசியல் பலம் இருந்தால் இவை அனைத்தையும் சமாளிக்கலாம் என்பதற்காக இந்த அரசியல் பிரவேசம்.
எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்தே இந்த மாதிரி சாமியார்களை நான் நம்புவதில்லை. கடவுள் பெயரால் இவர்கள் அடிக்கும் கொட்டங்களை சகிக்க முடிவதில்லை.
மேற்கண்ட எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது ஒரு நிகழ்ச்சி. இரண்டு மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் வந்திருந்தார் அடிகளார். அவரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அப்பொழுது அங்கே சிலர் பணம் வசூல் செய்துகொண்டு இருந்தனர். என்னவென்று கேட்டால், அடிகளாருக்கு பாத பூஜை செய்ய ரூ. 2,500.00, தொட்டு கும்பிட ரூ. 1,000.00, அடிகளார் உங்கள் வீட்டுக்கு வரவேண்டுமென்றால் ரூ. 25,000.00.
என்ன கொடுமை சார் இது. கடவுள் பக்தர்களுக்கு அருள் பாலிக்க பணம் வசூல் செய்கிறாரா அல்லது அருள் இங்கே விற்பனைக்கு உள்ளதா? அப்போ யாரிடம் பணம் இருக்கின்றதோ அவர்களுக்கு தான் கடவுள் அருள் கிடைக்குமா? அடுத்த வேலைக்கு உணவில்லாமல், தங்கள் கஷ்டம் தீரும் என்ற நம்பிக்கையில் கடவுளை தரிசிக்க வரும் அன்றாடம்காய்ச்சிகளுக்கு என்ன பதில்?
வருமான வரி அதிகாரிகளின் சோதனையில் கிடைத்தது கொஞ்சமல்ல. ருபாய் 13 கோடிக்கும் மேல் என்கின்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. படுக்கையறையில் மட்டும் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் ருபாய் 9 கோடி. இவையெல்லாம் யாருடைய பணம்? இவர்கள் உழைப்பால் வந்த பணமா? இல்லை "கடவுள் அருள்" மற்றும் "கல்வி" யை விற்றதனால் வந்த பணமா? பதிலுக்காக காத்திருக்கிறோம்....
நான் மட்டும் இவ்வாறு சொல்லவில்லை. மருவத்தூர் அருகில் உள்ள "அச்சிறுபாக்கம்" மற்றும் "சோத்துப்பாக்கம்" கிராமங்களில் உள்ள தேநீர் கடைகளில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தால், இவை அனைத்தும் (அல்லது இதற்கு மேலும்) சொல்கிறார்கள். அங்கே இவர்கள் நடத்துவது ஒரு தனி அரசாங்கம் என்றே சொல்லலாம்.
இதெல்லாம் அவர்களுக்குவந்த சொதனைகளாம். இவ்வாறு இனிமேல் வராமல் இருக்க ஒரு அரசியல் பலம் தேவைப்பட்டதால் இந்த அரசியல் பிரவேச முடிவாம்.
தங்கள் செல்வாக்கை (பணத்தை சொன்னேன் சார்) பயன்படுத்தி இவர்கள் தேர்தலில் ஜெயித்தால், இவர்கள் நல்லவர்களாகி விடுவார்கள், இவர்கள் கொள்ளையடித்த பணம் அனைத்தும் இவர்களுடையதாகி விடும். பின்னர் தங்கள் அரசியல் பலத்தை வைத்து இதற்க்கு மேலும் கொள்ளையடிப்பார்கள்.
ஆனால் நாமோ, "இவங்களெல்லாம் திருந்தவே மாட்டாங்க சார்" என்று சொல்லிக்கொண்டு நம் வேலையை பார்க்க கிளம்பி விடுவோம். வேறு ஏதாவது ஒரு ஊரில் ஒரு சாமியார் முளைப்பார். அவரும் கொள்ளையடிப்பார்.
தாயே ஆதிபராசக்தி (நான் அடிகளாரை சொல்லவில்லை மக்களே)
தெய்வம் நின்று கொள்ளும் என்று சொல்வார்கள். நீ கோவிலில் நின்றுகொண்டுதான் இருக்கிறாயே தவிர, தண்டிக்க மாட்டேன் என்கிறாயே. உன் காலடியில் இதனை அக்கிரமும் நடக்கின்றது.
முடிவாக மக்களுக்கு ஒரு கேள்வி....
"கடவுள் பெயரால் ஏமாற்று வேலைகளை நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?
அல்லது இவர்களை நல்லவர்கள் என்று நம்பிக்கொண்டு பின்தொடரும் மக்களின் குற்றமா?
உதாரணம் வேண்டுமா? இதோ...

- பிரேமானந்தா
- கொலைகார சங்கராச்சாரியார் கும்பல்
- நித்யானந்தா
என்றைக்கும் சாமியார்களில் இரண்டே வகைதான்... நல்ல சாமியார், போலி சாமியார் என்கிறீர்களா...? இல்லை... சாமியார் என்றாலே போலி தான்... பின்னே என்ன இரண்டு வகை...?
1. போலீசில் மாட்டிய சாமியார்
2. போலீசில் மாட்டாத சாமியார்
சிந்தியுங்கள் மக்களே!!!

No comments:
Post a Comment