Friday, October 22, 2010

மானாட மயிலாட - மனித சர்க்கஸ்


இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்ப்பதை அடியோடு வெறுப்பவன் நான். ஆட்டம் பாட்டம் என்கிற போர்வையில் இவர்கள் அடிக்கும் கூத்து அளவிடமுடியாது. 

நாளாக  நாளாக இந்த மாதிரி நிகழ்ச்சிகள் தாங்கள் என்ன நினைத்து தொடங்கினார்களோ அதனை முழுவதும் மறந்துவிட்டு, மற்ற தொலைக்காட்சிகளுக்கு போட்டியாக, அவர்களை விஞ்ச, வித்தியாசம் என்கின்ற போர்வையில், கண்மூடித்தனமாக போட்டிகளை நடத்துகின்றனர்.


ஒரு நடன நிகழ்ச்சியில் என்ன இருக்கவேண்டும்? நடனம்தானே? ஆனால் நான் பார்த்ததோ வேறு மாதிரி இருந்தது.


கம்பி மீது நடக்கிறார்கள்,
ஒருவரின் உடல் மீது இன்னொருவர் ஏறி நிற்கிறார்,
இருவரும்  சேர்ந்து குட்டிக்கரணம் அடிக்கிறார்கள்,
செங்குத்தான ஒரு சுவரில் உள்ள கம்பிகளில் வளைந்து நெளிந்து ஆடுகிறார்கள்.


பார்கின்ற எனக்கே என்னடா இது என்று இருந்தது.


நான் ஒன்றும் புதுமைகளை வெறுப்பவன் இல்லை. உலக வழக்கப்படி நடனம் என்பது ஒரு மேடையில் மனிதர்கள் மட்டுமே தங்கள் உடலசைவில் செய்வது. ஆனால் இங்கே நடப்பவற்றை காணும்போது, நடன இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சியை எப்படி நடன நிகழ்ச்சியாக எடுத்துக்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதற்கு நடுவர்களாக இரண்டு "நடன இயக்குனர்கள்" வேறு.


போட்டியாளர்கள் தாங்கள் வெற்றி பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.அவர்களை வழிப்படுத்துவது நடுவர்களின் கடமை அல்லவா? அனால் இவர்களோ, வழி தவறுதல்களை பாராட்டி சொல்ல சொல்ல, போட்டியாளர்களும் வழி தவறி செல்கிறார்கள்.


எப்படி  இந்த நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று நான் இவர்களுக்கு சொல்ல வரவில்லை. அவர்களுக்கு இது நன்றாகவே தெரியும் என்று நினைக்கிறேன்.


ஆளுங்கட்சியின்  தொலைகாட்சி என்றதும் என்ன வேண்டுமானாலும் செய்வதா? இவைகளை செய்தால் டி.ஆர்.பீ ரேட்டிங்கில் வேண்டுமானாலும் முன்னேற்றம் வரலாம். உலகம் முழுவதும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட தவறுகள் நேர்ந்தால், கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்காமல் போய்விடும். சற்று தொலைநோக்கில் சிந்தித்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். செய்வார்களா???


3 comments:

RAJA RAJA RAJAN said...

ஹா ஹா ஹா...

நண்பர்கள் உலகம் said...

நடுவர்களாக இருக்க ஒரு உடல் தகுதி வேண்டாமா?
இதில் அருவருக்கத்தக்க விமர்சனங்கள்/ஜாடைப்பேச்சுகள் வேறு!

Rajesh Krishnamoorthy said...

மிகவும் சரி திரு. சேகர் அவர்களே. எனக்கென்னவோ இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடனக் கலையை வளர்ப்பதாக தெரியவில்லை. போகிற போக்கில் பரிசுப்பணம் அதிகமாக அதிகமாக, இதில் பங்கேடுப்பவர்கள் ரிஸ்க் அதிகமாக எடுப்பார்கள். இதனை ஆதரிக்க ஒரு நடுவர் கூட்டமே உள்ளது.

Post a Comment