தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடந்த 1961ஆம் வருடம் "அனைவருக்கும் வீடு" என்கிற நோக்கில் தொடங்கப்பட்டது.
இதன் விதிகள்படி பொதுமக்களுக்கு 85% (குலுக்கல் முறையிலும்) மீதமுள்ள 15% அரசின் விருப்ப உரிமைப்படி ஒதுக்கப்படுகிறது.
தனியாக வசிக்கும் திருமணமாகாத பெண், உடல் ஊனமுற்றவர், ராணுவத்தினர், முதியோர், தியாகிகள், விளையாட்டு வீரர்கள், சமூக சேவகர்கள், அப்பழுக்கற்ற சேவை புரிந்த மாநில அரசு ஊழியர்கள் என்பன போன்ற பதினைந்து பிரிவுகளில் வீடுகள் வழங்கப்பட்டு வந்தன.
மேற்சொன்ன கடைசி இரண்டு பிரிவுகளில்தான் மிகப்பெரிய விதிமீறல்கள் நடந்து வந்துள்ளன.
2001 முதல் ஒதுக்கப்பட்ட மனைகளில் / வீடுகளில், சமூக சேவகர்கள் என்கின்ற பிரிவில் மட்டும் இருநூறு பேருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அடடே நம்மிடையே இவ்வளவு சமூக சேவகர்கள் வாழ்கிறார்களா? என்று நீங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அவர்கள் அனைவரும் அரசியல்வாதிகளின் சொந்தங்கள், முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள், மற்றும் முதல்வரின் மனைவி, துணைவி, மற்றும் இணைவி க்கு தெரிந்தவர்கள்.
நாளொன்றுக்கு பன்னிரண்டு மணி நேரம் சிரமம் பாராமல் உழைத்து, சம்பாதித்து, பத்து மணி நேரம் வரிசையில் நின்று, விண்ணப்பம் வாங்கி பூர்த்தி செய்து, நானூறு ருபாய் பணம் கட்டி, நமக்கும் ஒரு வீடு ஒதுக்கப்படும் என்ற நினைப்போடு காத்திருக்கும் சாதாரண குடிமகனுக்கு கிடைத்தது என்ன? வெறும் ஏமாற்றம் மட்டுமே. அவனது வீடு வாங்கும் கனவு, கனவாக மட்டுமே ஆகிப்போனது ஒரு மிகப்பெரிய கொடுமையான உண்மை.
இந்த காலகட்டத்தில் சரியான மற்றும் நியாயமான விலையில் வீடு வழங்கக்கூடிய ஒரு வாரியமானது இப்பேர்பட்ட ஒரு விதிமீறலை செய்வது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம்.
இப்படிப்பட்ட சமூக சேவகர்களை!!!??? நான் கேட்க விரும்புவது சில கேள்விகள் மட்டுமே....
- உங்களுக்கு எல்லாம் என்ன கேடு வந்தது? பொதுமக்களின் பணத்தை ஊழல் என்கின்ற போர்வையில் சூறையாடியது போதாது என்று மக்களுக்கு நியாயமாக சேர வேண்டிய பொருளையும் சூறையாடியது என்ன விதத்தில் நியாயம்?
- பணத்திற்கு கொஞ்சம் கூட குறைவில்லாத உங்களுக்கு எங்கள் வயிற்றில் அடிக்கவேண்டிய கட்டாயம் என்ன? எங்கள் பிணங்களை தின்றது போதாது என்று எங்கள் மல***ம் தின்ன வேண்டுமா?
இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய வீட்டு வசதித்துறை அமைச்சர், எமாற்றியவர்களுக்கு ம******** அள்ளி ஊட்டி விட்டுக்கொண்டிருக்கிறார். தானோ அல்லது தன் துறையோ எந்த விதமான தவறும் செய்யவில்லை என்று சொல்லிக்கொண்டு திரிகிறார். சமூக சேவகர்கள் என்கின்ற ஒரு சான்றிதழ் மட்டுமே தேவை, அது யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று கூறுகிறார். அப்படியானால், எனக்கு என் தம்பியோ அல்லது அண்டை வீட்டுக்காரரோ கூட சான்றிதழ் கொடுக்கலாம் போல இருக்கிறது.
ஆனால் இதனை எதிர்த்து போராடவேண்டிய நம் தமிழ் மக்களோ, நாக்கை தொங்க போட்டுக்கொண்டு இலவசங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு, கண்டும் காணாமல் இருந்து கொண்டிருக்கின்றது.
அதுதானே, தமிழர்கள் ஆயிரமாயிரமாய் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த ஜென்மங்கள் தானே நாம். ரஜினி படத்திற்கு கூடிய கூட்டம் கூட ராஜபக்சே வை விரட்ட வரவில்லையே. இங்கிலாந்தில் மூன்று லட்சம் தமிழர்களால் செய்ய முடிந்ததை ஆறு கோடி தமிழர்களால் ஏன் செய்ய முடியவில்லை?
இந்த ஊழலை வெளிக்கொணர்வோம் என்று ஒரு எதிர்கட்சி கூட்டம் வரும். அவர்களை நம்பி நாம் அவர்களை ஆட்சியில் அமர வைப்போம். அவர்களும் நாளை இதே கூத்தை திரும்ப செய்வார்கள். (அதிமுக கட்சியினருக்கு எத்தனை வீடுகள் ஒதுக்கப்பட்டது என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஒரு பெரிய காமெடி). ஒருவர் மாற்றி ஒருவர் சம்பாதித்துக்கொண்டு இருக்கிறார். இதை கேட்கவேண்டிய நாம் அன்றாட தேவைகளைக் கூட போராடி பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைமையில் இருக்கிறோம்.
அன்றே கொல்லவேண்டிய அரசன் கொல்லப்படவேண்டியவனாக இருக்கிறான்...
நின்று கொல்லவேண்டிய தெய்வம், நின்று கொண்டு மட்டும்தான் இருக்கின்றது.
வாழ்க ஜனபணநாயகம்.....
பி.கு
நான் மேலே சொன்ன கேட்ட வார்த்தைகளுக்கு மேல் வேறு ஏதாவது சிறப்பான வார்த்தைகள் இருந்தால், வாசகர்கள் அதனை சேர்த்துக்கொண்டு படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
4 comments:
இதைவிட இன்னமும் கேவலமாக திட்டி எழுதினால் கூட சம்பந்த பட்டவர்களுக்கு உறைகாதுதான். ஆனால் நம் வாசகர்களுக்கு சற்று தர்ம சங்கடம் நேரிடும் அல்லவா? அவர்கள் பொருட்டாவது எழுதுபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுவதை நானும் சமீபத்தில்தான் புரிந்துகொண்டேன்.
தொடருங்கள்.
காலம் காலம் காலமாக இது போல் ஒதுக்கீடுகளில் "ஓரிரு" நிகழ்வுகள் இருந்திருக்கலாம்; இது குறித்த வரைமுறைகளை மறு பரிசீலனை செய்கிறோம் ' என சொல்லி இருந்தால் பழுத்த அரசியல் வாதி என ஒப்புக் கொள்ளாலாம்; அரசு செயல்பாடுகளை என்ன சுட்டிக் காட்டினாலும் திருத்திக் கொள்கிறோம் என்று அவர் சொல்லி முப்பத்து மூன்று ஆண்டுகளில் கேட்டதில்லை. இது தமிழ் நாட்டின் சாபக் கேடு. ஆனால் இந்த விஷயத்தில், பார்ப்பனீயத்தை இழுக்காமல், பழைய அரசின் ஒதுக்கீடுகளை மட்டுமே சொல்லி இருக்கிறார்.
@ விஞ்ஞானி....
பழி போடவேண்டும் என்பதே குறிக்கோள். யார் மீது வேண்டுமானாலும் போடலாம் என்பது நம் கலைஞருக்கு கைவந்த கலை. இந்த முறை பார்ப்பனீய அஸ்திரம்...
@ கக்கு மாணிக்கம் அவர்களுக்கு...
எனக்கும் தகாத வார்த்தைகளை உபயோகித்து பதிவுகள் தருவது பிடிக்காத ஒன்று என்றாலும் இந்த முறை என் மனக்குமுறல்களின் வெளிப்பாடு இவ்வாறு வந்துவிட்டது. என்னால் சிறிது கூட ஜீரணிக்க முடியவில்லை.
வாசகர்கள் மன்னிக்கவும்...
Post a Comment