Saturday, November 5, 2011

வேலா...ஆஆஆஆஆஆஆவ்...யுதம்


சிவகாசி படத்துல - லோக்கல் ரவுடிகளை அழிச்சாச்சு...
திருப்பாச்சி படத்துல - சென்னை ரவுடிகளை அழிச்சாச்சு...

ஐயையோ... இப்போ அழிக்கறதுக்கு யாருமே இல்லையே? என்ன பண்றது?

ஆஹா... இருக்கவே இருக்கானுங்க பாகிஸ்தான் தீவிரவாதிக.

அதுக்குத்தான் நம்ம கேப்டன் இருக்காரே?

அவரு இப்போ வீ.ஆர்.எஸ் வாங்கி, ரிடையர் ஆகி அரசியலுக்கு வந்துட்டார் இல்ல? அவரு இடத்தை நாம புடிப்போம்....என்ன?

சரி... இப்போ கதைக்கு என்ன தேவை?

பாசத்துக்கு ஒரு கேரக்டர் - தங்கச்சி - இருக்காக.

ஒரு கெட்ட அரசியல்வாதி - இருக்காக
(தெரியாமத்தான் கேக்குறேன், அது எப்படி எல்லா படத்துலேயும் கேட்ட அரசியல்வாதின்னாலே உள்துறை அமைச்சராவே இருக்காங்க? இத பாத்துட்டு உங்களுக்கு நம்ம ப. சிதம்பரம் ஞாபகம் வந்துதுன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல!!!)

தங்கச்சி கேரக்டர் இருந்தா சென்னை சரிப்பட்டு வராது. அதனால கிராமம். ஓகே. அண்ணன் தங்கச்சி கிராமத்துல இருக்குறா மாதிரி வச்சிக்கலாம்.

சென்னைக்கு ஹீரோ வந்தாகனுமே? வாராரு. தங்கச்சி கல்யாணத்துக்கு சீட்டு பணம் எடுக்க வாராரு. 

தீவிரவாதிங்க சென்னை'ல தானே குண்டு வைக்கணும். வைக்குறாங்க. அதை ஹீரோ தானே எடுக்கணும்... எடுக்குறாரு. ஆனா அவருக்கே தெரியாம எடுக்கறாரு. 

அப்புறம் அவருக்கு வெறி வர்றதுக்கு யாராவது சாகனுமே? சாகறாங்க (அவரு தங்கச்சி).

கடைசியா அவரு எல்லாரையும் காப்பாத்துவாரா? அப்புறம், இல்லைன்னா எப்படி?

என்னடா... கில்லி, திருப்பாச்சி, ஆதி, சிவகாசி படங்கள்ளேர்ந்து சீன் சொல்றேன்னு பாக்குறீங்களா? இல்லை மக்களே... வேலாயுதம் படத்தோட கதை இதுதான்.

இதை படிச்சிட்டு அதுக்கப்புறமும் நீங்க படத்தை பாத்தே தீருவேன்னு அடம் புடிசீங்கன்னா, விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. 

படத்தோட ஹீரோ யாருன்னு கேக்கலியே?

அவரு பேரு "சந்தானம்"...

வாழ்க விஜய் ரசிகர்கள்...

4 comments:

கும்மாச்சி said...

வித்தியாசமான விமர்சனம். படம் செம மொக்கை.

dinesha said...

கவுண்டமணி : உன் வேலாயுதம்
படத்தோட கதைய சொல்றா....
விஜய் :
அண்ணா எனக்கு ஒரு தங்கச்சினா அத
சமுக விரோதிகள்
கொன்னுடரங்கனா அதுக்காக
அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே தீக்குச்சி
தலையா உன்
திருப்பாச்சி கதை என்னடா....
விஜய் : அண்ணா அதுலயயும்
எனக்கு ஒரு தங்கச்சினா அத சமுக
விரோதிகள் கொன்னுட கூடாதுன்னு
அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல
என்னடா வித்தியாசம்....
விஜய் :
சட்டை கலரை மாற்றி இருக்கேன்னா...
கவுண்டமணி : தெரியுண்டா உன்ன
பத்தி...ஆமா இந்த சுறா படத்தோட
கதையை சொல்றா...
விஜய் : மீனவ மக்களுக்காக
வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : டேய் டாக்கால்டி
மண்டையா... உன் குருவி படத்தோட
கதை என்னடா....
விஜய் : கடப்பால அடிமையாய்
இருக்கிற மக்களுக்காக
வில்லனை எதிர்த்து போரடுரன்னா...
கவுண்டமணி : இதுல
என்னடா வித்தியாசம்....
விஜய் : ??????
கவுண்டமணி : டே டப்பா தலையா உன்
வில்லு படத்தோட கதை என்னடா....
விஜய் : என்னோட அப்பாவ தீவிரவாதிகள்
கொன்னுடரங்கனா அதுக்காக
அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : டே அப்ப ஆதி படத்தோட
கதை என்னடா....
விஜய் : என்னோட குடும்பத்தையே சமுக
விரோதிகள் கொன்னுடரங்கனா அதுக்காக
அவங்களை பழி வாங்கறேன்னா...
கவுண்டமணி : இதுல
என்னடா வித்தியாசம்....
விஜய் : ஆதில தலைல வெத்தல
எச்சி துப்பி இருப்பானுங்கனா...
கவுண்டமணி : டே அத ஓன் மூஞ்சில
துப்பி இருக்கனும் டா....ஆமா நீ
எல்லா படத்தலையும் பிச்சகாரனா
இருந்துகிட்டு பணக்கார பொண்ண லவ்
பண்ற
விஜய் : அண்ணா எந்த
படத்தனா சொல்லுரிங்க?
சிவகாசியா திருமலையா இல்ல
வில்லுவானா ??

Gopi said...

Hello

Rajini has a formula and so Vijay. If you can digest Rajini why not Vijay?

Ellaam namma thalai ezhuththu.

Rajesh Krishnamoorthy said...

Thanks for the comment Mr. Gopi.

Rajini had a formula and it worked perfectly well and he did something which no one did it earlier. He tried a new thing (Baba) and it failed and he left it at that stage itself.

This formula of Vijay does not suit him and its high time he leaves and moves forward. He has some excellent chances (his next flick with Gautam Menon) and I hope atleast then he changes.

Post a Comment